» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான விற்பனை: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
வியாழன் 19, ஜூன் 2025 5:10:23 PM (IST)
மனமகிழ் மன்றம் எந்த விதியில் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது? பதிவு செய்யப்பட்ட மனமகிழ் மன்றங்களின் சட்ட திட்டங்கள் என்ன? என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்களில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் தான் மதுக்கடைகள் இருக்க வேண்டும். இந்த தூரக்கட்டுப்பாடு விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே, விஸ்வநாதம் கிராமத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்தும், அந்த இடத்தில் எதிர்காலத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி கொடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், "மனமகிழ் மன்றங்கள் அமைக்க எதன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்படுகிறது? இரண்டு உடைந்துபோன கேரம் போர்டுகளை வைத்துக்கொண்டு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான விற்பனை நடைபெறுகிறது. மனமகிழ் மன்றம் எந்த விதியில் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது?
பதிவு செய்யப்பட்ட மனமகிழ் மன்றங்களின் சட்ட திட்டங்கள் என்ன? அந்த மனமகிழ் மன்றங்களில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? அந்த உறுப்பினர்களுக்கு ஏற்ப மதுபானங்கள் விநியோகிக்கப்படுகிறதா? மனமகிழ் மன்றங்களை கலால் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கிறார்களா?. இதற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கலால் அதிகாரிகள், டாஸ்மாக் மேலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா ஆய்வு
வெள்ளி 20, ஜூன் 2025 5:37:39 PM (IST)

பாலியல் வழக்குகள்: பெண்கள், குழந்தைகளின் பெயர், அடையாளத்தை வெளியிடக்கூடாது!
வெள்ளி 20, ஜூன் 2025 5:01:49 PM (IST)

தொழில்நுட்பக் கோளாறு: அவசரமாக தரையிறங்கிய விமானம்.. 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!
வெள்ளி 20, ஜூன் 2025 4:26:26 PM (IST)

தயாநிதி மாறனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை: சன் டி.வி. நெட்வொர்க் விளக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 4:12:32 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை!
வெள்ளி 20, ஜூன் 2025 3:21:15 PM (IST)

ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும்: தமிழக அரசு
வெள்ளி 20, ஜூன் 2025 11:38:49 AM (IST)
