» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அஜித்குமார் விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

செவ்வாய் 1, ஜூலை 2025 5:03:28 PM (IST)



திருப்புவனம் கோயில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இன்று முதல் 45 நாட்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு நடைபெறவுள்ளது. நாளை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. 

தமிழ்நாடு முழுவதும், ஜூலை 3ம் தேதி முதல், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுகவினர் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க உள்ளனர். தமிழ்நாட்டின் மண், மொழி,மானம் காக்க மக்களை ஒன்றுதிரட்டுவதே இந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் நோக்கம். தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதற்காகவே, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,” என்றார்.

அப்போது மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "திருப்புவனம் கோயில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இன்று கூட மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Jul 1, 2025 - 06:22:23 PM | Posted IP 172.7*****

கேரளாவில் போலீசார் தப்பு செய்தால் தூக்குத் தண்டணை கிடைக்கும், ஆனால் தமிழ் நாட்டில் திராவிட ஆட்சியில் கிழிக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory