» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக ஆட்​சி கட்​டுப்​பாட்​டில் இல்லாமல் தறிகெட்டு ஓடு​கிறது: கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

வியாழன் 3, ஜூலை 2025 7:46:42 PM (IST)

திமுக ஆட்​சி அவர்​கட்​டுப்​பாட்​டில் இல்லாமல் தறிகெட்டு ஓடு​கிறது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ குற்றம்சாட்டினார். 

மகாகவி பார​தி​யார் பிறந்த இல்​லத்தை புதுப்​பிக்​காத தமிழக அரசை கண்​டித்து எட்​டயபுரத்​தில் அதி​முக சார்​பில் வடக்கு மாவட்ட அதி​முக செய​லா​ள​ரும் முன்​னாள் அமைச்​சரு​மான கடம்​பூர் செ.​ராஜூ எம்​எல்ஏ தலைமையில் ஆர்ப்​பாட்​டம் நடந்​தது. இதில் அவர் பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் ஒரே ஒரு சம்​பவம் சாத்​தான்​குளத்​தில் நடந்​தது. அது தவறு​தான். அந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்​றப்​பட்​டு, அதில் குற்​றச்​சாட்​டப்​பட்​ட​வர்​கள் இன்று வரை வெளிவர முடி​யாத நிலை உள்​ளது. 

ஆனால், இந்த ஆட்​சி​யில் இது​வரை 25 சம்​பவங்​கள் நடந்​துள்​ளன. ஸ்டெர்​லைட் போராட்​டத்​துக்கு இன்​றைக்கு அமைச்​ச​ராக உள்ள கீதாஜீவன்​தான் காரணம். அந்தப் போராட்​டத்தை தூண்​டி​விட்​டது யார்? போராட்​டத்தை தொடங்கி வைத்த தலை​வர்​கள் எங்கே போனார்​கள்? அவர்​கள் பாதிக்​கப்​பட்​டார்​களா? அப்​பாவி​கள் 13 பேர் உயி​ரிழந்​தனர். பத்​திரி​கை​யாளர்​கள், ஊடகங்​கள் சுதந்​திர​மாக செயல்பட முடிய​வில்​லை. 

திமுக அரசின் தவறுகளை சுட்​டிக்​காட்​டக் கூடாது என்ற நிலைப்​பாட்​டில் இந்த அரசு உள்​ளது. அண்ணா பல்​கலைக்​கழக விவ​காரத்தை மூடி மறைக்​கப் பார்த்​தார்​கள். நீதி​மன்​றம் தலை​யிட்ட பின்​னர் ஞான​சேகரன் கைது செய்​யப்​பட்​டார். அதில், யார் அந்த சார்? என்ற விவ​காரத்​துக்கு ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டதும் பதில் கிடைக்​கும். இந்த ஆட்​சியே இவர்​களின் கட்​டுப்​பாட்​டில் இல்​லை. தறிகெட்டு ஓடு​கிறது. இவ்​வாறு அவர் தெரி்வித்​தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory