» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூரில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகள் : கனிமொழி எம்.பி., ஆய்வு!

வெள்ளி 4, ஜூலை 2025 7:57:02 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகளை கனிமொழி கருணாநிதி எம்.பி.,  ஆய்வு செய்தார். 

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு வருகின்ற ஜூலை 7ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான   முன்னேற்பாடு பணிகளைக் கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், திருச்செந்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தார். 

ஆய்வின் போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தக்கார் ஆர்.அருள்முருகன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற (07/07/2025) அன்று வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா காலங்களில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும், இவ்விழாவிற்கான வேள்விச்சாலை பூஜைகள் (01/07/2025) அன்று முதல் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து வேள்விச்சாலை பூஜை நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காகப் பல கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory