» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு!

செவ்வாய் 8, ஜூலை 2025 12:43:26 PM (IST)



கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு 3 ஆக உயர்ந்துள்ளது. 

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் கூறுகையில், "வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 2 மாணவர்கள், ஒரு மாணவி என மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory