» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி

செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)



திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களை பாதுகாப்பது எனது கடமை என்று கனிமொழி எம்பி கூறினார். 

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஓரணியில் தமிழ்நாடு என்று முதல்வர் துவங்கி வைத்துள்ள உறுப்பினர் சேர்க்கக்கூடிய முனைப்பு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. தொகுதி வாக்காளர்களில் 30 சதவீதத்தை 40 நாட்களில் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. இப்போதே பலர் தொகுதிகளில் 30 சதவிகிதத்தை அடைந்து விட்டனர். 

பெரியார் கொள்கையை பின்பற்றும் தாங்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் குடமுழுக்கு நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்நின்று செய்தீர்களே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, என்னுடைய நம்பிக்கை என்பதை தாண்டி மக்களுடைய நம்பிக்கை அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும். கும்பாபிஷேகத்திற்கு வந்திருக்கும் ஐந்து லட்சம் மக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல், கஷ்டம் இல்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்திரமாக செல்ல வேண்டும் என்பதற்காக எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்தோம்.

எந்த பிரச்சினையும் இல்லாமல் வந்து போக வேண்டும் என்பது தான் எல்லோருடைய எண்ணமாக இருந்தது. இந்த குடமுழுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் சூரசம்ஹாரமாக இருந்தாலும் சரி மற்ற நிகழ்வாக இருந்தாலும் சரி ஏற்பாடுகளை நேரில் சென்று மக்களுக்கு வசதிகள் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து செய்வோம். மக்கள் பிரதிநிதியாக என்னுடைய கடமை இதை நான் செய்ய வேண்டும். 

இது திருச்செந்தூர் கோவிலுக்கானது மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் சரி வேறு எந்த மதத்தின் நிகழ்வாக இருந்தாலும் சரி என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது தான் என்னுடைய கடமை. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நீங்கள் போட்டியிடப் போகிறீர்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சிரித்துக் கொண்டே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றார்.பேட்டியின்போது அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory