» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா திட்டவட்டம்: அண்ணாமலை பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:10:34 PM (IST)
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா பலமுறை மிகத் தெளிவாக கூறிவிட்டதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

எனவே அமித் ஷா சொல்வதை மாற்றி, கூட்டணி ஆட்சி இல்லை என்று கூறினால் இந்த கட்சியில் நான் தொண்டனாக இருக்கவே தகுதி இல்லை. கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள், அதில் எனக்கு பங்கு இல்லை. ஆனால் என்னுடைய தலைவர்கள் பேசியிருப்பதை நான் தூக்கிப்பிடித்தாக வேண்டும். அவர்கள் சொன்னதை நான் நம்புகிறேன். அதனால் நான் இதில் உறுதிபட இருக்கிறேன்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணி ஆட்சி என்று மிகத் தெளிவாக கூறிவிட்டார். அவர் சொன்னதை நான் எப்படி மாற்றி கூற முடியும்? அமித் ஷா கூறியதில் அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அவர்கள் பேசி முடிவெடுக்கலாம். 'கூட்டணி கட்சியில் இருப்போம், இல்லையெனில் நாங்கள் ஏன் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்' என்று பாமக சொல்கிறார்கள். தேமுதிக, புதிய தமிழகம் கட்சித் தலைவர்கள் இதையே கூறுகிறார்கள். கூட்டணி ஆட்சியைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
தலைவர்கள் சொகுசு காரில் செல்வார்கள். ஆனால் ஒவ்வொரு கட்சியிலும் உள்ள தொண்டர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள்? தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அமைச்சரவைக்குச் செல்லும்போது நல்லது செய்வார்கள், அதைப் பார்த்து நான் பெருமைபட்டுக்கொள்வேன் என்றுதான் ஒவ்வொரு தொண்டரும் நினைப்பார்கள். தொண்டர்கள் கட்சிக்கு கடினமாக உழைக்கும்போது அவருடைய கட்சி உயரத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். நான் தொண்டர்களின் குரலாக பேசிக் கொண்டிருக்கிறேன்" என்று பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் வள்ளி குகையில் 6 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி!
வெள்ளி 18, ஜூலை 2025 5:35:30 PM (IST)

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார் என்பது 2 நாளில் அம்பலமாகும்: ராமதாஸ் பேட்டி!
வெள்ளி 18, ஜூலை 2025 5:20:08 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்கரம் செய்தவனை சுட்டுக் கொல்ல வேண்டும்: தாய் ஆவேசம்
வெள்ளி 18, ஜூலை 2025 4:40:58 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை!
வெள்ளி 18, ஜூலை 2025 3:09:42 PM (IST)

போதையில் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் : பாதுகாப்பு கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 18, ஜூலை 2025 12:15:21 PM (IST)
