» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெருந்தலைவர் குறித்து சர்ச்சையை ஆரம்பித்தது யார்? முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!
வியாழன் 17, ஜூலை 2025 3:57:09 PM (IST)
காமராஜர் குறித்து திருச்சி சிவாவின் பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி சிவாவின் பேச்சு, அரசியல் களத்தில் மட்டுமல்லாமல் பொதுத் தளத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட பல கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டன. இந்த சூழலில் தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு திருச்சி சிவா விளக்கம் அளித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில், கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கர்மவீரர் காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? திமுக-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? பெருந்தலைவர் காமராஜர் பற்றி திரு. ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண்.
பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே? அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க ஐயா காமராஜர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது உங்கள் திமுக கொத்தடிமைகள் தானே?
காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. அப்படி கர்மவீரர் காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது திமுக தானே?
இவரே வெடிகுண்டு வைப்பாராம்.. இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க @mkstalin அவர்களே! அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று! ஒன்றைத் தெளிவாக சொல்கிறேன்- உங்களாலோ, உங்கள் அடிப்பொடிகளாலோ, ஒருபோதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது! வாழ்க கர்மவீரரின் புகழ்! என அதில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் வள்ளி குகையில் 6 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி!
வெள்ளி 18, ஜூலை 2025 5:35:30 PM (IST)

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார் என்பது 2 நாளில் அம்பலமாகும்: ராமதாஸ் பேட்டி!
வெள்ளி 18, ஜூலை 2025 5:20:08 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்கரம் செய்தவனை சுட்டுக் கொல்ல வேண்டும்: தாய் ஆவேசம்
வெள்ளி 18, ஜூலை 2025 4:40:58 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை!
வெள்ளி 18, ஜூலை 2025 3:09:42 PM (IST)

போதையில் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் : பாதுகாப்பு கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 18, ஜூலை 2025 12:15:21 PM (IST)
