» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 4:19:27 PM (IST)

தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடுக்கரை, காட்டுப்புதூர் மற்றும் திடல் ஊராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடுக்கரை, காட்டுப்புதூர் மற்றும் திடல் ஊராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடுக்கரை, காட்டுப்புதூர் மற்றும் திடல் ஊராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.7.06 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 29.03.2025 அன்று நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டமானது தெரிசனங்கோப்பு கிராமத்தில், பழையாற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு பழையாற்றில் நீர் உறிஞ்சிக் கிணறு அமைத்து, நாளொன்றுக்கு 3 இலட்சம் லிட்டர் குடிநீர் நீரேற்றம் செய்யப்பட்டு, கடுக்கரை, காட்டுப்புதூர் மற்றும் திடல் ஊராட்சிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 தரைமட்ட நீர்தேக்கத்தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு ஊராட்சிகளில் அமைந்துள்ள 18 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
மேலும் தெரிசனங்கோப்புக்குட்பட்ட பழையாற்றில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீர்திட்ட பணிகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டதோடு, பணிகளை விரைந்து முடிக்குமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 9300 மக்கள் பயன்பெறுவார்கள். இத்திட்டமானது அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.
ஆய்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் T.C.ராஜன், உதவி நிர்வாக பொறியாளர் ஆல்வின்சி, உதவி பொறியாளர் ஷிபின், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:48:44 PM (IST)

தூத்துக்குடியில் 2 வீடுகளில் 31 பவுன் நகை கொள்ளை : போலீசார் விசாரணை!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:22:25 PM (IST)

தூத்துக்குடியில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்வு: மீனவர்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 9:28:03 AM (IST)

விஜயை நேரில் பார்த்தால் முகத்தில் ஓங்கி குத்துவேன்: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:28:44 PM (IST)

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)

மூப்பனார் பிரதமராவதை தடுத்தது தமிழகத்துக்கு நடந்த துரோகம்: நிர்மலா சீதாராமன் பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 4:12:31 PM (IST)
