» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டிஆர்பி ராஜா

திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:15:17 PM (IST)

ஆட்டோமொபைல் உலகத்தில் தூத்துக்குடி அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார். 

தூத்துக்குடியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில் "இந்த ஆட்சியில் தொடர்ந்து தமிழ்நாடு நாட்டின் தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. முதலீட்டாளர்களின் முதல் தேர்வு மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சி உள்ளது. எங்கு சென்றாலும் கட்டமைப்பு உலகத்தரம் வாய்ந்த வசதிகள் இருக்கிறதே ஆகையால் படித்த இளைஞர்கள், குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. உலகத் திறமை வாய்ந்த உற்பத்தியாளர்கள் இருப்பதால் உலக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் வருகிறார்கள்.

பல நாடுகளில் இந்த அளவிற்கு வாய்ப்புகள் இல்லை என்று முதலீட்டாளர்கள் சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் மிகவும் எளிதாக வர்த்தகம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இந்திய முழுவதும் தென் தமிழ்நாட்டில் மகத்தான வளர்ச்சி வர வேண்டும் என்ற வகையில் ஆட்சி அமைந்த உடன் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதி அளித்தார்.

தொழில்துறையின் வட தமிழ்நாடு எப்படி உயர்ந்த இருக்கிறதோ, அதையும் மேற்கு மண்டலத்திற்கும், டெல்டா மாவட்டத்திற்கும், தென் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பல தொழில் வளர்ச்சியை கொண்டுவர முதலமைச்சர் கூறினார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்த முடிவு செய்து கோவை நடத்தப்பட்டது. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு உலக தரத்திற்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாடு தொழிற்சாலை மையமாகவே மாறி வருகிறது.

நாட்டில் தொழில் வளர்ச்சி தூத்துக்குடியில் முதல் டிஎன் ரைசிங் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 22 ஒப்பந்தங்களில் 32,282 கோடி பெரு நிறுவனங்கள் தொழில்துறை சார்பாக பொருந்தும் ஒப்பந்தங்கள் செய்துள்ளனர். 48 ஆயிரத்து 689 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன தென் தமிழகத்திற்கு மட்டும் 30 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளனர் 46 ஆயிரத்து 450 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை வரை வேலை வாய்ப்புகள் உருவாகும். சிறுகுறு நடுத்தர தொழில் தினங்கள் 1261 கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் புரிந்து நாம் செய்யப்பட்டு உள்ளன. இன்னும் பல கோடி ரூபாய் முதலீடுகள் இன்னும் முடிவு செய்யப்படும். தென் தமிழகத்திற்கு முதலீடுகள் வரும்போது இங்கேயோ வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்பதை முதலீட்டின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிபந்தனை என்றார்.

நான் முதல்வன் திட்டத்தில் 350 பேருக்கு பயிற்சி அளித்து அதில் 250 பேருக்கு மின் பாஸ் நிறுவனத்தில் பயிற்சி வேலை வழங்கப்பட்டுள்ளது. முதலீடு ஒரு பகுதியில் வரும்போது அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்பதை திமுக அரசின் இலக்கு. கப்பல் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி வர இருக்கிறது. உங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் பல்வேறு

விண்வெளி கட்டுமானத் தொழில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் சுற்று வட்டார பதில் மிகப்பெரிய விண்வெளி செக்டார் வர இருக்கிறது. இந்தியாவில் தூத்துக்குடியில் தான் முதன்முறையாக எலக்ட்ரானிக்ஸ் துறையில் பிசிபி லேமினேஷன் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எங்கு எது தேவையோ அதற்கு ஏற்ப முதலீட்டாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து

Thoothukudi kaaranAug 5, 2025 - 12:12:34 PM | Posted IP 162.1*****

2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட மேம்பாலம், 570 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டதாக திட்டமிடப்பட்டுள்ளது, இது தெற்கு காவல் நிலையத்தில் இருந்து தொடங்கி மாநகராட்சி பூங்கா அருகே முடிவடைகிறது. முன்னதாக, இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதலுக்காக ₹9.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஒரு சில தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்த திட்டத்தை எதிர்த்தனர். தொடர்ச்சியான சட்டப் போராட்டங்களால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

யாருக்கு ?Aug 4, 2025 - 05:58:12 PM | Posted IP 104.2*****

யாருக்கு வளர்ச்சி ? யாருக்கு லாபம் ?

KANNANAug 4, 2025 - 05:34:27 PM | Posted IP 162.1*****

THOOTHUKUDI 15 VARUSHAMAGA VVD MEMBALAM,ORUNGINAINTHA PERUNDHU NILAIYAM YENA PALA VALARCHIGALAI KANDU MUDHALIDATHIL ULLADHU ANIVARUM ARINTHATHEY.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory