» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு : போராட்டம் நடத்த உப்பு உற்பத்தியாளர்கள் முடிவு
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 3:33:42 PM (IST)

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் முள்ளக்காடு எம்.சவேரியார் புரத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து சங்கத்தின் தலைவர் மந்திரமூர்த்தி பேசுகையில் "கப்பல் கட்டும் தளம் விரிவாக்கம் மற்றும் தனியார் நிறுவனத்திற்காக உப்பளங்களை கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பு இருந்து நடைபெற்று வரும் உப்பு உற்பத்தி தொழிலை பாதுகாக்கவும் அதில் ஈடுபட்டுள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பள தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செயலாளர் சேகர், பொருளாளர் பொன்ராஜ் மற்றும் சின்னராஜ் ஆகியோர் பேசுகையில், இந்தப் பகுதியில் பல தலைமுறைகளாக உப்பு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் தொழில் செய்து வருகின்றனர்,ஆனால் இது குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு சரியான தகவலை அளிக்காமல் அப்படி ஏதும் நடைபெறவில்லை என்று பொய்யாக கூறியுள்ளனர். எனவே தொழிலை பாதுகாக்க ஆலோசனை செய்து போராட்ட முடிவை எடுக்க உள்ளோம் என்று கூறினார்.
தொடர்ந்து உப்பு உற்பத்தியாளர் முகேஷ் சண்முகவேல் பேசுகையில் உண்மையான நிலவரத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரிடம் நேரில் விளக்கி கூறப்பட்டபோது உங்கள் தொழில் பாதிக்கப்படாமல் பாதுகாத்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். எனவே தொடர்ந்து தொழிலை பாதுகாக்க மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம் என்று கூறினார்.
உற்பத்தியாளர் சிவாகர் பேசுகையில், இந்தப் பகுதியில் உள்ள உப்பளங்களுக்கு முறையாக பட்டா பெற வேண்டும்,அதன் மூலம் நாம் தீவிரமாக செயல்பட முடியும், எனவே இதில் தாமதமோ யோசனைக்கோ இடமின்றி விரைந்து செயல்பட்டு போராட்ட தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார் அதனை பிரபாகர் உள்ளிட்ட உற்பத்தியாளர்கள் அனைவரும் வரவேற்று கூறினர்.
அதனைத் தொடர்ந்து உற்பத்தியாளர்கள் ராஜபாண்டியன், பக்கிள்துரை, பாலசுப்பிரமணியன், ஈ.பால், மகாராஜன், பொன்ராம்,ஸ்ரீராம், சுடலைமணி உள்ளிட்ட உற்பத்தியாளர்கள் தங்கள் கருத்தை வலியுறுத்தி பேசினர். கம்யூனிஸ்ட் கட்சி உப்பள தொழிற்சங்கங்கள் சார்பில் பொன்ராஜ், பரமசிவம், பேச்சிமுத்து பேசினர். இதனைத் தொடர்ந்து உப்பு உற்பத்தி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி உப்பு உற்பத்தியாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடவும் முதற்கட்டமாக வருகிற 14-ம் தேதி முத்தையாபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய்மைப் பணி தனியாருக்கு; சாராயக்கடை அரசுக்கா?... சீமான் கேள்வி
ஞாயிறு 10, ஆகஸ்ட் 2025 5:53:31 PM (IST)

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
ஞாயிறு 10, ஆகஸ்ட் 2025 5:36:45 PM (IST)

திமுகவுடன்தான் எங்கள் கூட்டணி: வைகோ பேச்சு!
ஞாயிறு 10, ஆகஸ்ட் 2025 10:07:20 AM (IST)

செண்பகவல்லி அம்மன் கோயிலில் உண்டியல் மூலம் ரூ.15.66 லட்சம் வருவாய்!
சனி 9, ஆகஸ்ட் 2025 5:51:37 PM (IST)

தாம்பரத்தில் ரூ.119.14 கோடியில் அரசு தலைமை மருத்துவமனை: முதல்வர் திறந்து வைத்தார்!
சனி 9, ஆகஸ்ட் 2025 5:44:51 PM (IST)

அனைத்து தரப்பு மக்களுக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் பயன்: அமைச்சர் பெருமிதம்!!
சனி 9, ஆகஸ்ட் 2025 5:32:36 PM (IST)
