» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூலி திரைப்படத்துக்கு குழந்தைகளை அழைத்துவர வேண்டாம்: திரையரங்குகள் வேண்டுகோள்!
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 3:59:30 PM (IST)
கூலி படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளதால், குழந்தைகளை அழைத்துவர வேண்டாம் என திரையரங்குகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கூலி. இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள உள்ளது. இப்படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், ஏ சான்றிதழ் என்பதால் திரையரங்குகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பி.வி.ஆர் மற்றும் ஏஜிஎஸ் திரையரங்குகள் சார்பில் விடுக்கப்பட்டுள்ள பதிவில் "ஏ சான்றிதழ் படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வராமல் இருக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். ஏ சான்றிதழ் படங்களுக்கு செல்லும் பொழுது வயதை நிரூபிக்கும் சான்றிதழ் அவசியம்” என்று தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய்மைப் பணி தனியாருக்கு; சாராயக்கடை அரசுக்கா?... சீமான் கேள்வி
ஞாயிறு 10, ஆகஸ்ட் 2025 5:53:31 PM (IST)

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
ஞாயிறு 10, ஆகஸ்ட் 2025 5:36:45 PM (IST)

திமுகவுடன்தான் எங்கள் கூட்டணி: வைகோ பேச்சு!
ஞாயிறு 10, ஆகஸ்ட் 2025 10:07:20 AM (IST)

செண்பகவல்லி அம்மன் கோயிலில் உண்டியல் மூலம் ரூ.15.66 லட்சம் வருவாய்!
சனி 9, ஆகஸ்ட் 2025 5:51:37 PM (IST)

தாம்பரத்தில் ரூ.119.14 கோடியில் அரசு தலைமை மருத்துவமனை: முதல்வர் திறந்து வைத்தார்!
சனி 9, ஆகஸ்ட் 2025 5:44:51 PM (IST)

அனைத்து தரப்பு மக்களுக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் பயன்: அமைச்சர் பெருமிதம்!!
சனி 9, ஆகஸ்ட் 2025 5:32:36 PM (IST)
