» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சொசைட்டி பாவங்கள் வீடியோ: கோபி - சுதாகர் யூடியூப் சேனல் மீது காவல் நிலையத்தில் புகார்!!

வியாழன் 7, ஆகஸ்ட் 2025 4:42:48 PM (IST)

நெல்லை கவின் கொலை தொடர்பாக சொசைட்டி பாவங்கள் என்ற பெயரில் வீடியோ வெளியிட்ட  கோபி - சுதாகர் யூடியூப் சேனல் மீது காவல் நிலையத்தில் மீது அளிக்கப்பட்டுள்ளது. 

யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். இவர்களின் பரிதாபங்கள் சேனலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அண்மையில் பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது. நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவில் சாதிவெறிக்கு எதிராக நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களை பேசியிருந்தது அனைவரையும் ஈர்த்தது.

அதே சமயம் இந்த் வீடியோ டெலிட் ஆவதற்குள் பார்த்துவிடுங்கள் என்று நெட்டிசன்கள் இந்த விடியோவை இணையத்தில் வைரலாக்கினர். ஏற்கனவே திருப்பதி லட்டு தொடர்பான வீடியோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது. பாஜக கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அந்த வீடியோ நீக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி இந்த புகாரை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், நெல்லையில் இரு குடும்பங்கள் இடையேயான மோதலை இரு சமூக மோதலாக சித்தரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

முதலில்Aug 7, 2025 - 09:54:41 PM | Posted IP 172.7*****

நீ வக்கீல் தானா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory