» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவிலில் தங்கரதம் புறப்பாடு 4ஆம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:19:50 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், கிரிபிராகத்தில் கட்டுமான பணிகள் முடிவுற்ற நிலையில் வருகிற 4ஆம் தேதி முதல் தங்கரதம் புறப்பாடு மீண்டும் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர்  சு.ஞானசேகரன், வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தினந்தோறும் மாலை 06.00 மணியளவில் தங்கரதம் பிரகாரம் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது. 

இத்திருக்கோயிலில் பெருந்திட்ட வளாக பணிகளின் பகுதியாக கிரிபிரகார தரைதளம் பணிகள் நடைபெற்று வந்ததால், 17.07.2024 முதல் தங்கரதம் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கிரிபிராகத்தில் கட்டுமான பணிகள் முடிவுற்ற நிலையில் 04.09.2025 ஆம் தேதி முதல் முன் வழக்கபடியும் பக்தர்கள் விருப்பம் மற்றும் நலன் கருதியும் தங்கரதம் புறப்பாடு மீண்டும் நடைபெற உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory