» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோயிலில் பிரேக் தரிசனம் முறை: செப்.11க்குள் ஆட்சேபணைகள் தெரிவிக்கலாம்!
வியாழன் 4, செப்டம்பர் 2025 10:36:03 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ரூ.500 கட்டணச் சீட்டில் விரைவு தரிசனம் முறை அமலுக்கு வர உள்ளது.
இதுகுறித்து இணை ஆணையர் /செயல் அலுவலர் ஞானசேகரன், தக்கார் இரா.அருள்முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2025-2026 மானியக் கோரிக்கை எண் 17 ல் அறிவிப்பு எண் 208-ல் பக்தர்கள் பெருவாரியாக வருகைபுரியும் திருக்கோயில்களில் தினசரி ஒரு மணி நேரம் இடைநிறுத்தம் தரிசன வசதி (Break Darshan) ஏற்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேற்படி சட்டமன்ற அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்வதற்கு தினசரி பிற்பகல் 03.00 மணி முதல் 04.00 மணி வரை கீழ்க்கண்ட விபரப்படியான திருவிழா மற்றும் விசேஷ நாட்களை தவிர்த்து பக்தர் ஒருவருக்கு ரூ.500 கட்டணச்சீட்டில் இடை நிறுத்த தரிசனம் நடைமுறைக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இடைநிறுத்த தரிசனம் வழங்க இயலாத நாட்கள்
தைப்பூசம் - 5 நாட்கள்
மாசித்திருவிழா - 10 நாட்கள்
பங்குனி உத்திரம் - 3
சித்திரை வருடபிறப்பு - 1
வைகாசி விசாகம் - 5
ஆவணித் திருவிழா - 5
நவராத்திரி உற்சவம் - 5
கந்தசஷ்டி- 10 நாட்கள்
பௌர்ணமி நாட்கள் (ஒரு வருடத்திற்கு) - 24 நாட்கள்
மேற்படி நாட்களை தவிர நிர்வாக காரணங்களால் திருக்கோயில் நிர்வாகாத்தால் அறிவிக்கப்படும் இதர நாட்கள் இடைநிறுத்த தரிசனம் குறித்து ஆட்சேபணைகள் /ஆலோசனைகள் இருப்பின் எழுத்து பூர்வமாக இணை ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் என்ற முகவரிக்கு எழுத்து மூலமாக 11.09.2025 மாலை 06.00 மணிக்குள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் கிடைக்கும்படி அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
11.09.2025 தேதிக்கு பின்னர் பெறப்படும் ஆட்சேபணைகள் ஆலோசனைகள் ஏற்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் : 6 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:36:49 PM (IST)

அஜித் படத்தின் படத்தில் அனுமதியின்றி பாடல் வழக்கு தொடர்ந்த இளையராஜா!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:24:54 PM (IST)

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:08:04 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

கல்லூரி வாழ்க்கை தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:47:17 PM (IST)

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:59:59 AM (IST)
