» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!

வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)



குமரி மாவட்டத்தில் ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகளை ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –கன்னியாகுமரி மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் 16 பேரூராட்சிகளில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக அழகப்பபுரம் பேருராட்சியில் ரூ.11.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 2 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் அமைத்தல், 1.89 கி.மீ. பிரதான குழாய்கள் அமைத்தல், 52.170 கி.மீ குடிநீர் விநியோக குழாய்கள் அமைத்தல் மற்றும் 2315 புதிய வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்குதல் ஆகிய பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அம்ரூத் 2.0 குடிநீர் திட்டத்தின்கீழ் மீதமுள்ள 15 பேருராட்சிகளில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டப்பணிகளில் 80% பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 20% பணிகளை இம்மாத இறுதிக்குள் விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட பேருராட்சி செயல் அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தாரர்கள் ஆகியோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.

ஆய்வில் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் வி.சிவசங்கரலிங்கம் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (பொறுப்பு) ஆர். பாண்டியராஜன், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory