» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அஜித் படத்தின் படத்தில் அனுமதியின்றி பாடல் வழக்கு தொடர்ந்த இளையராஜா!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:24:54 PM (IST)

அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி வசூலைக் குவித்த குட் பேட் அக்லி படத்தில், தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா ரூ. 5 கோடி இழப்பீடுகோரி நோட்டீஸ் அனுப்பினார். இருப்பினும், பாடல்களின் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றுவிட்டதாக குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில்தான், குட் பேட் அக்லியில் தனது பாடல்களை பயன்படுத்தியது, பதிப்புரிமை சட்டத்துக்கு விரோதமானது என்றுகூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெற்றதாகக் கூறப்படும் அந்த உரிமையாளர் யார்? என்றும் குட் பேட் அக்லியின் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கானது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமையில் (செப். 8) விசாரணைக்கு வரவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் : 6 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:36:49 PM (IST)

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:08:04 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

கல்லூரி வாழ்க்கை தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:47:17 PM (IST)

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:59:59 AM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:53:27 PM (IST)
