» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செப்.18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:11:44 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 18ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 18.09.2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து ஆகஸ்ட் 2025 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நேரில் பெறப்படும்.
கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யும் வசதி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்க விலக்கு: முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:48:19 PM (IST)

விஜய் சுற்றுப் பயணம் நாளை தொடக்கம்: தவெக தொண்டர்களுக்கு நெறிமுறைகள் அறிவிப்பு!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:40:50 PM (IST)

டிராஃபிக் சலான் மோசடி: காவல்துறை எச்சரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:24:37 PM (IST)

நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:04:07 PM (IST)

பச்சிளம் குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த கொடூர தாய் கைது!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:52:08 PM (IST)

வன்னியர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு: ராமதாஸ்- அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:45:02 PM (IST)
