» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிராஃபிக் சலான் மோசடி: காவல்துறை எச்சரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:24:37 PM (IST)
RTO Traffic Challan.apk file உங்களது செல்போனிற்கு வந்தால் தயவு செய்து யாரும் அதனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்ற பெயரில் தெரிந்த அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள் அல்லது உங்களது செல்போனிலிருந்து அழித்துவிடுங்கள்.
இது உங்கள் வேலையை எளிதாக்கவோ அல்லது உங்கள் வங்கி சேவையை மேம்படுத்த முடியும் என்ற நோக்கில் உங்கள் ஆசையை தூண்டி இதுபோன்று apk file-ஐ அனுப்பி சைபர் மோசடி குற்றவாளிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த apk file-ஐ பதிவிறக்கம் செய்தால் உங்களது மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டு மொபைலில் உள்ள வங்கி தொடர்பான அனைத்து விவரங்கள் மற்றும் உங்கள் புகைப்படங்கள் உட்பட மொபைலில் உள்ள அனைத்து தரவுகளையும் சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தி உங்களை மிரட்டவோ அல்லது உங்களது அனுமதி இல்லாமல் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளவோ நேரிடும்.
எனவே இதுபோன்ற apk file உங்களது செல்போனிற்கு வந்தால் தயவு செய்து யாரும் அதனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டாம் மேலும் உடனடியாக அதனை உங்களது மொபைல் போனில் இருந்து அழித்து விட வேண்டும் என பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துக்கொள்கிறது.
மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்களில் சிக்கிக் கொண்டால் தயங்காமல் உடனடியாக cybercrime.gov.in இணையதளத்திலோ அல்லது 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணிலோ அழைத்து புகாரை பதிவு செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு பதிவு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்க விலக்கு: முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:48:19 PM (IST)

விஜய் சுற்றுப் பயணம் நாளை தொடக்கம்: தவெக தொண்டர்களுக்கு நெறிமுறைகள் அறிவிப்பு!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:40:50 PM (IST)

செப்.18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:11:44 PM (IST)

நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:04:07 PM (IST)

பச்சிளம் குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த கொடூர தாய் கைது!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:52:08 PM (IST)

வன்னியர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு: ராமதாஸ்- அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:45:02 PM (IST)
