» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
யூ18 கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாதனை: தூத்துக்குடி மாணவ, மாணவிகள் அசத்தல்
சனி 13, செப்டம்பர் 2025 8:52:16 AM (IST)
தேசிய ஜூனியர் (யூ18) கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. தமிழக அணியில் தூத்துக்குடி பள்ளி, மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தினர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற 75வது தேசிய ஜூனியர் (யு18) கூடைப்பந்து போட்டியில் பல்வேறு அணிகள் மோதிக் கொண்டனர். இதில் தமிழ்நாடு அணி தனது சிறப்பான விளையாட்டால் இறுதிச் சுற்றை எட்டியது. இறுதிச் சுற்றில் ஆடவர் அணி பஞ்சாபையும், மகளிர் அணி குஜராத்தையும் அதிரடி ஆட்டத்தின் வாயிலாக வென்று தங்கப்பதக்கம் பெற்று இரட்டை சாம்பியன் எனும் தேசிய அளவிலான சாதனையையும் படைத்துள்ளது.
சாம்பியன் பட்டம் வென்ற தமிழக ஆடவர் மற்றும் மகளிர் அணியினருக்கு வாழாத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழக அணியின் ஆடவர் பிரிவில் தூத்துக்குடி கிரசன்ட் பள்ளி மாணவன் முகமத் ஹாரிப் மற்றும் மகளிர் பிரிவில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலப் பள்ளி மாணவிகள் நூருல் சஜிதா, ஜெப்ரின் ஆகியோரும் சிறப்பாக விளையாடி தூத்துக்குடி மாவட்டத்திற்கும், இவர்கள் சார்ந்த பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். மேலும் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து செயல்பட்ட தமிழ்நாடு கூடைப்பந்து அணியின் பயிற்சியாளர் தூத்துக்குடி பிரதீப்பின் முயற்சியை கூடைப்பந்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் தூத்துக்குடி மாவட்டம் வெற்றி பட்டியலில் தொடர்ந்து முதன்மை பெற்று வருவதால் பயிற்சியாளர்களின் முயற்சி வரவேற்பை பெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தி.மு.க.வினர் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 12:25:23 PM (IST)

நகைக்கடை நிறுவனம் ரூ.51.17 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: உரிமையாளர் கைது
சனி 13, செப்டம்பர் 2025 12:02:22 PM (IST)

தவெக தலைவர் விஜய் திருச்சி வருகை: ஆயிரக் கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
சனி 13, செப்டம்பர் 2025 11:01:55 AM (IST)

நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை செய்த 3பேர் கைது: 1½ கிலோ கஞ்சா, கார், பைக் பறிமுதல்!
சனி 13, செப்டம்பர் 2025 10:15:16 AM (IST)

சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்க விலக்கு: முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:48:19 PM (IST)

விஜய் சுற்றுப் பயணம் நாளை தொடக்கம்: தவெக தொண்டர்களுக்கு நெறிமுறைகள் அறிவிப்பு!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:40:50 PM (IST)
