» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒழுக்கத்துடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் : மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:19:25 AM (IST)

"மாணவர்கள் அறம் சார்ந்து நல்வழியில் ஒழுக்கத்துடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்" என்று உயர்நீதிமன்ற நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த 26வது ப பட்டமளிப்பு விழாவிற்கு நாடார் உறவின்முறைச் சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்,
கல்லூரி செயலாளர் கண்ணன்,நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.
சென்னை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு இளங்கலை பிரிவில் 161 மாணவர்களுக்கும்,முதுகலை பிரிவில் 20 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி பேசியதாவது: கோவில்பட்டியில் 26 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய பெரியோர்கள் உள்ள இக்கல்லூரியில் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் படிப்பு மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும்.
பட்டம் பெற்ற பின்பு வேலை, பிசினஸ்,போன்றவற்றில் கவனம் செலுத்தி முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும்.மாணவர்கள் அறம் சார்ந்து வாழ வேண்டும்,சிந்தனைகள் நல்வழியில் இருக்க வேண்டும்.செல்போன் மற்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நல்வழியில் பயன்படுத்த வேண்டும்.அறத்தை மீறினால் வாழ்க்கை திசை மாறிவிடும், கஷ்டமான சூழ்நிலை வந்தால் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.மாணவர்கள் அறம் சார்ந்து நல்வழியில் ஒழுக்கத்துடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் இவ்வாறு பேசினார்.
இதில் நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயலாளர் செல்வம்,பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன்,கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண், தங்கமணி, ராஜ்மோகன், சரவணகுமார், வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், பாபு, கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நாடார் உறவின்முறை சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகம் தற்குறிகளால் நிறைந்து இருக்கிறது: விஜயை விமர்சித்த சீமான்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:07:44 PM (IST)

மரக்கடையில் விஜய் பிரசாரத்தால் ரூ.1¼ லட்சம் சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:00:41 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மத்திய பா.ஜனதா அரசு நெடுநாள் நீடிக்காது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:49:10 AM (IST)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆய்வு
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:07:13 AM (IST)

திமுகவை எந்த கொம்பனும் அசைக்க முடியாது : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:28:51 PM (IST)
