» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கிள்ளியூர் வட்டம் கருங்கல் பெத்லகேம் பொறியியல் கல்லூரி கலையரங்கில் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம் இன்று (19.09.2025) நடைபெற்றது. இம்முகாமில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ் குமார் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு கடனுதவிகள் வழங்கி பேசுகையில்-
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கிள்ளியூர் வட்டம் கருங்கல் பெத்லஹேம் பொறியியல் கல்லூரி கலையரங்கில் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
அதற்காகத்தான் கல்விக்கடன் பெறுவதற்கும் அதைப்பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவ மாணவியர்கள் மேற்படி முகாமினை முறையாக பயன்படுத்தி தங்களின் உயர்கல்வி கனவை நனவாக்கி கெள்ள வேண்டும். எனவே நம்முடைய மாவட்டத்தில் கல்வி கடன் தேவைப்படுகின்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் உரிய முறையில் நல்ல வழிகாட்டுதலோடு கல்வி கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் பெறும் கல்விக்கடன் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திருப்பி செலுத்த வேண்டும். மேலும் இன்று நடைபெற்ற கல்விகடன் முகாமில் 10 கல்லூரிகளிலிருந்து 136 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி உட்பட்ட 17க்கும் மேற்பட்ட்ட வங்கிகள் கலந்துகொண்டனர். முகாமில் ரூ.1.87 கோடி அளவில் கடன் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ்குமார் பேசினார்கள்.
நடைபெற்ற முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், கருங்கல் பெத்லஹேம் பொறியியல் கல்லூரி முதல்வர் எமி பிரேமா, துறை அலுவலர்கள், வங்கியாளர், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கப்பலில் இறந்த 3பேருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:48:22 PM (IST)

போதைப் பொருள் என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் : அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:31:17 PM (IST)

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விதிமுறைகள் : த.வெ.க. வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:12:16 PM (IST)

முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயிர்களை பயிரிட வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத்.
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:35:38 PM (IST)

திமுக உடன் கூட்டணி கிடையாது.. அதையும் தாண்டி புனிதமானது - கமல்ஹாசன் விளக்கம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:20:49 PM (IST)
