» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அக்.3ஆம் தேதியை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் : அரசு அலுவலர் சங்கம் கோரிக்கை

வெள்ளி 26, செப்டம்பர் 2025 11:33:53 AM (IST)

தமிழகத்தில் அக்டோபர் 3-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- வரும் அக்டோபர் 1-ம் தேதி ஆயுத பூஜை விடுமுறையாகவும், 2-ம் தேதி விஜய தசமி, அரசு விடுமுறையாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறை நாட்கள் முறையே புதன் மற்றும் வியாழக்கிழமையில் வருகின்றன.

அடுத்து வரும் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது. அதைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே 3-ம் தேதி ஒருநாளை மட்டும் விடுமுறையாக அரசு அறிவித்தால் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். தசரா பண்டிகையை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவார்கள்.

இப்பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்பவர்களும் இவ்விடுமுறையை நன்றாக கொண்டாடிவிட்டு பணிக்கு மகிழ்வுடன் வருவார்கள். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே இந்நாட்கள் தசரா விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அக்டோபர் 3-ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory