» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!

வெள்ளி 26, செப்டம்பர் 2025 3:37:12 PM (IST)

நாகர்கோவிலில் மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்த கலாதாரன் (53) என்பவர் இவர் நாகர்கோவில் எஸ்.பி அலுவலக சாலை, தெற்கு தெருவில் 9-வருடங்களாக மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணிக்கு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். மறுநாள் காலை 9 மணிக்குத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, மேஜை டிராயரில் இருந்த ₹1 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை காணவில்லை. இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கடையில் திருடிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி அலுவலகம் அருகே நடந்த இந்த திருட்டுச் சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory