» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 71-வது நினைவு நாள் விழா : ஆட்சியர் மரியாதை!
வெள்ளி 26, செப்டம்பர் 2025 4:00:40 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 71-வது நினைவு தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 27.07.1876-ஆம் ஆண்டு பிறந்தார். 26.09.1954- ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்கள். அன்னாரது பணியினை நினைவு கூறும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் 71-வது நினைவு நாளையொட்டி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுஷ்யா, சுசீந்திரம் பேரூராட்சி துணைத்தலைவர் சுப்பிரமணியபிள்ளை, வருவாய் ஆய்வாளர் பிரேமகீதா, கிராம நிர்வாக அலுவலர் செல்வி.வளர்மதி, பேரூராட்சி உறுப்பினர்கள் காசி, தாணுமாலையபெருமாள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:23:01 PM (IST)

கதர் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:09:57 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 4:21:24 PM (IST)

மத்திய அரசு நிதி விடுவிப்பு: ஆர்டிஇ திட்டத்தில் நடைமுறைகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:06:42 PM (IST)

கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:50:14 PM (IST)

கொள்கை எதிரி: விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:44:04 PM (IST)
