» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை: தாறுமாறாக உயர்ந்த வெள்ளி விலை!

சனி 27, செப்டம்பர் 2025 10:53:23 AM (IST)

தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. விரைவில் சவரன் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தங்கம் விலை கடந்த 23-ம்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் விலை குறைந்து சற்று ஆறுதலை கொடுத்தது.

இந்தநிலையில் நேற்று மீண்டும் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 80-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று (27-09-2025) அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.750-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கடந்த 2 நாட்களாக விலை மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.153-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் வெள்ளி விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.6-ம், கிலோவுக்கு ரூ.6 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.159-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

27.09.2025 ஒரு சவரன் ரூ.85,120 (இன்று)

26.09.2025 ஒரு சவரன் ரூ.84,400 (நேற்று)

25.09.2025 ஒரு சவரன் ரூ.84,080

24.09.2025 ஒரு சவரன் ரூ.84,800

23.09.2025 ஒரு சவரன் ரூ.85,120

22.09.2025 ஒரு சவரன் ரூ.83,440

21.09.2025 ஒரு சவரன் ரூ.82,320


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory