» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் தசரா திருவிழா கோலாகலம் : வேடம் அணிந்த பக்தர்கள் வீதி உலா!
சனி 27, செப்டம்பர் 2025 12:44:50 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வேடமணிந்த பக்தர்கள் வீதி, வீதியாக சென்று காணிக்கை வசூல் செய்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு தினம் தோறும் அம்மன் சிறப்பு அலங்காரதுடன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 4-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
தசரா திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். இந்த பக்தர்கள் கோவிலில் இலவசமாக வழங்கப்பட்ட மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பை வலது கையில் கட்டிக் கொண்டு, தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர், ஊராக வீதி, வீதியாக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். அவர்களிடம் பொதுமக்களும் ஆர்வத்துடன் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் தசரா விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:23:01 PM (IST)

கதர் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:09:57 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 4:21:24 PM (IST)

மத்திய அரசு நிதி விடுவிப்பு: ஆர்டிஇ திட்டத்தில் நடைமுறைகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:06:42 PM (IST)

கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:50:14 PM (IST)

கொள்கை எதிரி: விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:44:04 PM (IST)
