» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்: ஒரே நாளில் 24 வாகனங்கள் பறிமுதல்!

திங்கள் 13, அக்டோபர் 2025 3:59:11 PM (IST)



குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ஒரே நாளில் 24 வாகனங்களை போலீசார்  பறிமுதல் செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்  உத்தரவுப்படி போக்குவரத்து காவல்துறையினர் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று (12.10.2025) இரவு தக்கலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் அசோக் தலைமையிலான போலீசார் தக்கலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, குடிபோதையில் ஓட்டி வந்த பதினெட்டு சக்கரங்களை கொண்ட இரண்டு லாரிகள், டெம்போ-02, கார்கள்-8, ஆட்டோ-01 மற்றும் இருசக்கர வாகனங்கள்-11 என மொத்தம் 24 வாகனங்கள்  பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வருபவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory