» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிபிஐ விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பெரிய வழக்கு ஏதாவது இருக்கிறதா? சீமான் கேள்வி!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:45:48 PM (IST)
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பெரிய வழக்கு ஏதாவது இருக்கிறதா? என்று நாம் தமிழர் சீமான் கேள்வி எழுப்பினார்.
கரூர் மாவட்டத்தில், தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் அஸ்ரா கார்க் ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.தவெக சார்பில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மேற்பார்வையிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "சிபிஐ விசாரணையை நாங்கள் எப்போதும் ஏற்க மாட்டோம். அதை எப்போதும் மாநில உரிமை, தன்னாட்சிக்கு எதிரான ஒன்றாக பார்க்கிறேன். எங்களுடைய காவல்துறை விசாரணையில் என்ன குறை உள்ளது. அரசு தோல்வியை ஒப்புக் கொள்கிறதா. எல்லோருமே மாநில உரிமை பேசிக் கொண்டிருக்கிறீர்கள். சிபிஐ துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மட்டும் இரண்டு மூளைகள் இருக்கின்றனவா.
இத்தனை வருடங்களில் சிபிஐ விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பெரிய வழக்கு ஏதாவது இருக்கிறதா. அவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுத்தார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம். காவல்துறை தமிழ்நாடு அரசிடம் உள்ளது. சிபிஐ மத்திய அரசிடம் உள்ளது. நாம் தான் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வுத் துறைகள் தன்னாட்சி அமைப்புகள் என்று நாம் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியருக்கு வலை : தலைமை ஆசிரியர் மீதும் வழக்குப் பதிவு!
செவ்வாய் 18, நவம்பர் 2025 9:43:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொய்கை அணை திறப்பு: 450.23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:58:05 PM (IST)

கொலை - கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:33:50 PM (IST)

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
செவ்வாய் 18, நவம்பர் 2025 5:41:49 PM (IST)

தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதி வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:35:47 PM (IST)

வ.உ.சிதம்பரனாருக்கு பாராளுமன்றத்தில் சிலை நிறுவப்படும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:24:44 PM (IST)




