» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து செய்ததற்கான அரசாணை வெளியீடு: மதிப்பெண் சான்றிதழ் நடைமுறை மாற்றம்!

செவ்வாய் 14, அக்டோபர் 2025 8:41:21 AM (IST)

பிளஸ்-1 பொதுத் தேர்வு ரத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நடைமுறையையும் மாற்றி அறிவித்துள்ளது.

2017-18-ம் கல்வியாண்டு முதல் பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டு. அதன்படி, கடந்த கல்வியாண்டு வரை அதாவது 8 ஆண்டுகளாக பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 7 முதல் 8 லட்சம் வரையிலான மாணவ-மாணவிகள் எழுதி வந்தனர். இந்தநிலையில் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை-2025-ல், பிளஸ்-1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை அரசாணையாக அதை வெளியிட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: 2025-26-ம் கல்வியாண்டு முதல் பிளஸ்-1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 2025-26-ம் கல்வியாண்டு முதல் பிளஸ்-1 வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு 2017-18-ம் கல்வியாண்டுக்கு முன்னர் இருந்த நடைமுறையை பின்பற்றி தேர்வு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

2025-26-ம் கல்வியாண்டில் இருந்து பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையை மாற்றி, பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய பின்னர் பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண்களை மட்டும் உள்ளடக்கிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த அரசு தேர்வுகள் இயக்குனருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

மேலும் ஏற்கனவே பிளஸ்-1 வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மட்டும் பிளஸ்-1 வகுப்பு பொதுத் தேர்வினை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது, மார்ச் 2030 வரையில் தொடர்ந்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குனருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory