» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

ஓடும் ரயிலில் கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபருக்கு மருத்துவர் நேரில் வந்து சிகிச்சை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வாலிபர் ஒருவர் பயணித்தார். பாலக்காடு ெரயில் நிலையத்திற்கு ரயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார். ஆனால் கொட்டாவி விட்ட கண்ணிமைக்கும் நொடியில் அவரால் மீண்டும் வாயை மூடி இயல்பு நிலைக்கு வர முடியாமல் கடும் சிரமப்பட்டார்.
மேலும் தான் அனுபவிக்கும் கஷ்டத்தை கூட அவரால் வாயால் பேசி சொல்ல முடியவில்லை. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாலக்காடு ெரயில்வே மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பி.எஸ்.ஜிதன் விரைந்து வந்து, சம்பந்தப்பட்ட வாலிபருக்கு உடனடி சிகிச்சை அளித்தார். இதையடுத்து அந்த வாலிபர் வாய் மூடி பேசிய நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பினார். தொடர்ந்து அதேரயிலில் அந்த வாலிபர் பயணம் செய்து தனது ஊருக்கு திரும்பினார்.
இதுகுறித்து மருத்துவ அதிகாரி கூறுகையில், ‘வாலிபருக்கு கொட்டாவி விடும்போது வாய் மீண்டும் மூட முடியாமல் போன நிலைக்கு ‘‘டெம்பரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்லொகேஷன் எனப்படுவது ஆகும். அதாவது தாடை எலும்பு சுழற்சி சிக்கல் என்று பெயர். கீழ்தாடை எலும்பின் பந்துபூட்டு இயல்பான இடத்தில் இருந்து நகர்ந்து விடும் நிலையே இது.
இதனால் கொட்டாவி விடும்போது வாய் திறந்த நிலையிலேயே முடங்கி விடும். இதன்காரணமாக வலி, பேசவும், வாய் மூடவும் சிரமம் ஏற்படும். அதிகமாக கொட்டாவி விட்டாலும், விபத்துகள் அல்லது சில நோய்களாலும் இது ஏற்படலாம். டாக்டரிடம் சிகிச்சை பெற்றால் மீண்டும் இயல்பான நிலைக்கு மாற்ற முடியும். ஆனால் சில நேரங்களில் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:14:38 PM (IST)

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை தொடங்கியது!
சனி 18, அக்டோபர் 2025 11:54:51 AM (IST)
