» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏரல் தாமிரபரணி உயர்மட்ட பாலத்தில் திடீர் பள்ளம்: இணைப்புச்சாலையும் ½ அடி கீழே இறங்கியது

புதன் 22, அக்டோபர் 2025 9:00:04 AM (IST)



ஏரலில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட புதிய தாமிரபரணி ஆறு உயர்மட்ட பாலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டிருப்பதுடன், இணைப்பு சாலையில் ½ அடி கீழே இறங்கியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் வர்த்தக நகரமான ஏரலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனத்திலும், வர்த்தரீதியாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் வந்து செல்கின்றனர். அத்துடன் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான மாண-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு ஏரல் பகுதிக்கு வருகின்றனர். ஏரல் தென்பகுதியில் உள்ள 500-க்கும மேற்பட்ட கிராமங்களில் இருந்து தாமிரபரணி ஆறு உயர்மட்ட பாலம் மற்றும் தரை பாலம் வழியாக ஏரலுக்கு வந்து செல்கிறார்கள். 

இதே போல் வடபகுதியில் உள்ள மக்களும் ஏரல் மற்றும் தாமிரபரணி ஆற்று பாலத்தை கடந்து தென்பகுதியிலுள்ள குரும்பூர், நாசரேத், சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி போன்ற நகரங்களுக்கும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சென்று வருகின்றனர். இதுதவிர ஏரல் பகுதிமக்கள் குரும்பூர் மார்க்கமாக திருச்செந்தூர் மற்றும் நெல்லை பகுதிக்கும் சென்று வருகின்றனர்.

இப்படி இருமார்க்கத்திலும் ஏரல் தாமிரபரணி ஆறு உயர்மட்டப் பாலத்தையும், தரைப்பாலத்தையும் கடந்து சென்று வந்தனர். இந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் உயர்மட்ட பாலம் பலத்த சேதம் அடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரூ.6.95 ேகாடியில் பாலம் சீரமைப்பு பணியும், 37 மீட்டர் பாலம் நீட்டி இணைப்பு சாலையும் அமைக்கப்பட்டது. 

இந்த பணி முடிவடைந்த நிலையில், இந்த ஆற்றுப்பாலத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து தொடங்கி, நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஏரல் பகுதியில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தீபாவளி அன்று தாமிரபரணி ஆற்றின் உயர் மட்ட பாலத்தின் வடபகுதியில் 2 இடங்களில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே பாலத்தின் இணைப்புச்சாலை அரை அடிக்கு கீழே இறங்கிவிட்டது. 

மேலும் பாலத்தின் இருபுறத்திலும் உள்ள தடுப்பு சுவர்கள் வாகனங்கள் செல்லும் போது அதிர்கின்றன. இதை அறியாமல் ேநற்று பாலத்தில் சென்ற 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். கார், வேன், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பாலத்தில் உள்ள பள்ளத்தில் சிக்கியும், இணைப்பு சாலையிலும் சிரமத்திற்கு உள்ளாகி வவுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாலத்தை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory