» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் : காவல் துறை அழைப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 3:36:41 PM (IST)
இறச்சகுளத்தில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்று குமரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளத்தில் இயங்கி வந்த "JNF Trading" என்ற நிதி நிறுவனம், அதன் இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள் மீது நாகர்கோவில் பொருளாதாரக் குற்றப்பிரிவு குற்ற எண்: 02/2025, U/s.406, 420, 120(B) IPC, Sec.5 of TNPID Act-1997 and Sec.21(3) and 23 of BUDS Act-2019-15.09.2025-4 செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. ஆகவே, மேற்படி நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த நபர்கள் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் மனு கொடுக்கும்படி நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், இது போன்று பணம் முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாகவும், நிலம் தருவதாகவும் மற்றும் பணம் இரட்டிப்பாக தருவதாகவும் கூறும் தனியார் நிதி நிறுவனங்களில் யாரும் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றும், RBI அனுமதி பெற்ற தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகளில் முதலீடு செய்து பணத்தை பாதுகாத்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
புதன் 22, அக்டோபர் 2025 3:53:56 PM (IST)

மனைவி, 2 மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை: கடன் தொல்லையால் விபரீதம்!
புதன் 22, அக்டோபர் 2025 12:16:00 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
புதன் 22, அக்டோபர் 2025 11:42:59 AM (IST)

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 11:23:25 AM (IST)

காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் கரையை கடக்கும் : வானிலை மையம் தகவல்!
புதன் 22, அக்டோபர் 2025 10:41:10 AM (IST)

ஏரல் தாமிரபரணி உயர்மட்ட பாலத்தில் திடீர் பள்ளம்: இணைப்புச்சாலையும் ½ அடி கீழே இறங்கியது
புதன் 22, அக்டோபர் 2025 9:00:04 AM (IST)
