» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்ட முதல்வர் மருந்தக சேமிப்பு குடோனில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு

வியாழன் 23, அக்டோபர் 2025 11:06:33 AM (IST)



கன்னியாகுமரி மாவட்ட முதல்வர் மருந்தக சேமிப்பு கிடங்கினை  ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட மார்த்தாண்டம் பகுதியில் கல்குளம் விளவங்கோடு தாலுகா கூட்டுறவு விற்பனைச் சங்க வாளகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தக மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர்  தெரிவிக்கையில்-  தமிழ்நாடு முதலமைச்சர்  பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்திடும் வகையிலும் தொழில்முனைவோர் / மருந்தாளுநர்கள் நலன் கருதியும் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கங்களை கடந்த 24.02.2025 அன்று காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் திறந்து வைத்தார்கள். 

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 37 மையங்களில் முதல்வர் மருந்தகங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மேல்குறிப்பிட்ட மருந்தகங்களில் மருந்து வகைகள் கொண்டு செல்வதற்கு மார்த்தாண்டம் பகுதியிலுள்ள கூட்டுறவு விற்பனைச் சங்கம் வாளகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தக மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள மருந்து வகைகள் தங்கு தடையின்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. 

மேலும் மருந்து பொருட்களின் இருப்புகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள், மாத்திரைகள் மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கில் உள்ளதா என  துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டமான முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளையும், கிடங்குகளில் அத்தியாவசிய பொருட்களின் நிலையத்தின் இருப்பினையும் நேரடி கொள்முதல் நெல் செயல்பாடுகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.
 
ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி, கன்னியாகுமரி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி, மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மற்றும் மாவட்ட மருந்து சேமிப்பு கிட்டங்கியின் மேலாண்மை இயக்குநர் துறை துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory