» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல: ஊடகங்களுக்கும் பங்கு உண்டு: அஜித்குமார்

சனி 1, நவம்பர் 2025 10:27:43 AM (IST)

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு என நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேல் 110 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டும் என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டும்.

ஒரு பிரபலம் வந்தால் அவரை காண மக்கள் கூட தான் செய்வார்கள். கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை. திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி, பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி? இது நம் திரையுலகை உலகயளவில் தவறாகக் காட்டுகிறது.

எங்கள் மீது வைத்துள்ள ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் குடும்பத்தை மறந்து, நேரம், தூக்கமின்றி படப்பிடிப்புகளில் பங்கேற்கிறோம். ஆனால், உயிரை பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம் அன்பை காட்ட வேறு வழிகள் உண்டும். முதல் நாள் முதல் காட்சி கலாசாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory