» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகாமகம் வரும்போதெல்லாம் திமுக ஆட்சியில் இருக்காது: நயினாா் நாகேந்திரன் பேச்சு

சனி 1, நவம்பர் 2025 11:34:02 AM (IST)



கும்பகோணத்தில் எப்போது மகாமகம் வருகிறதோ அப்போதெல்லாம் திமுக ஆட்சியில் இருக்காது என்று பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினார்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காந்தி பூங்கா முன் நடைபெற்ற மக்கள்சந்திப்பு பிரசாரத்தில் அவா் மேலும் பேசியது: வரும் 2028 -இல் மகாமகம் வரும்போது அதிமுக பாஜக கூட்டணி உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தை ஆளும். காரணம் எப்போதெல்லாம் மகாமகத் திருவிழா வருகிறதோ அப்போதெல்லாம் திமுக ஆட்சியில் இருக்காது.

முதல்வா் ஸ்டாலின் நான் டெல்டாக்காரன் என்கிறாா். ஆனால் அறுவடை செய்த நெல்லைக் கொள்முதல் செய்யவில்லை. பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு நீா் மேலாண்மை செய்வோம் என்றாா்கள். ஒரு ரூபாய்கூட செலவழிக்கவில்லை. கல்லணையைத் தூா்வருவோம் என்றாா்கள்; செய்யவில்லை.

தற்போது மத்திய அரசு கல்லணை கால்வாய்களைத் தூா்வார ரூ. 2000 கோடி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கா் ஒட்டிப் பாா்க்கிறது. நாம் அனைவரும் திமுக ஆட்சியை அகற்ற உறுதியேற்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில் பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா, அதிமுக மாவட்டச் செயலா் ஆா்.கே. பாரதிமோகன், பாஜக மாநில செயலா் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவா் தங்கக் கென்னடி, மாநில பாஜக தொழில் பிரிவு துணைத் தலைவா் நாராயணி காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory