» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ. 17ல் தொடக்கம்: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சனி 1, நவம்பர் 2025 12:09:30 PM (IST)

கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படவுள்ளதாக, டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

நிகழாண்டு சபரிமலை சீசன் நவ. 17இல் தொடங்கி ஜன. 20ஆம் தேதி வரை 65 நாள்கள் நீடிக்கிறது. இதையொட்டி, பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்படவுள்ளன. இதேபோல, காவல் துறை சார்பிலும் பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுகுறித்து டிஎஸ்பி ஜெயச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது: சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசனை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதுமிருந்து கூடுதலாக 200 போலீசார் நியமிக்கப்படவுள்ளனர்.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் அதிக போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சில இடங்களில் ஒருவழிப் பாதை அமல்படுத்தப்படவுள்ளது. ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.

கன்னியாகுமரி நகரப் பகுதியில் காந்தி மண்டபம் சந்திப்பு, சூரிய அஸ்தமனப் பூங்கா கடற்கரைப் பகுதி, சிலுவை நகர், பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பு, தமிழ்நாடு ஹோட்டல் ஆகிய 5 இடங்களில் புறக் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். 

விவேகானந்தர் மண்டபத்துக்குச் செல்லும் படகுத் துறை, பகவதியம்மன் கோயில், முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்படுவர். கடலோரப் பாதுகாப்புக் குழும போலீசாரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுவர்.

தங்கும் விடுதிகளில் கட்டண விவரப் பட்டியலை கட்டாயம் வைக்க வேண்டும். வியாபாரிகள், உணவக- விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நடமாடும் சிறு வியாபாரிகள், புகைப்படக் கலைஞர்கள் ஆகியோருடன் தனித்தனியே கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும். சுற்றுலாப் பயணிகளிடம் கனிவுடன் பேசி வியாபாரம் செய்ய அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory