» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை: ஒப்புக்கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ்!

செவ்வாய் 4, நவம்பர் 2025 5:53:48 PM (IST)



ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்ததாக மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டு, மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்த நிலையில், அவருக்குக் கடந்த வாரம் ஆண்குழந்தையும் பிறந்தது. ஜாய் கிரிசில்டாவின் புகாரை மாநில மகளிர் ஆணையம் விசாரித்த நிலையில், அவரைத் தான் திருமணம் செய்ததாகவும், அவரது குழந்தையின் தந்தை என்றும் மகளிர் ஆணையத்தின் விசாரணை முன்பாக மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில்தான், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறை ஆணையருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஆணையத்தைப் பரிந்துரைத்து மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி, வழக்கு முடியும்வரையில் குழந்தையின் பராமரிப்புச் செலவையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory