» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 218 விஏஓக்கள் நேரடி நியமனத்துக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 5, நவம்பர் 2025 5:21:10 PM (IST)
தமிழகத்தில் 218 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சி-க்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக கிராம நிர்வாக அலுவலர் சங்க பொதுச்செயலாளர் அருள்ராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அகமது ஃபயஸ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 218 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப செப்.1 முதல் 15-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட அளவில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கிய பிறகு காலியுள்ள கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பலாம். ஏற்கெனவே கிராம நிர்வாக அலுவலர்களின் முதுநிலை பட்டியலை கருத்தில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த தேதி அடிப்படையாகக் கொண்டு மாவட்ட மாறுதல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவது தவறு எனக் கூறி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தச் சூழலில் 218 காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்ப முடிவு செய்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அரசு பட்டியலை அனுப்பியுள்ளது. இதனால் இடமாறுதலுக்காக பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.
218 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை மாவட்ட பணியிட மாறுதல் மூலம் நிரப்பாமல் நேரடி நியமனம் மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சி-க்கு இடைக்கால தடை விதித்தும், தகுதி வாய்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாறுதல் கோரிய மனுக்களை பரிசீலித்து அவர்களுக்கு உரிய இடங்களில் இடமாறுதல் வழங்கிய பிறகு நேரடி முறையில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி குமரேஷ்பாபு விசாரித்தார். பின்னர் நீதிபதி, மாவட்ட பணியிட மாறுதல் நடத்தாமல் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நேரடி முறையில் டிஎன்பிஎஸ்சி நிரப்ப தடை விதிக்கப்படுகிறது. மனு தொடர்பாக வருவாய் துறை ஆணையர், டிஎன்பிஎஸ்பி தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ.14-க்கு தள்ளிவைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் வணிக மின் உற்பத்தி: டிசம்பரில் 2வது அலகு சோதனை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:46:37 AM (IST)

நான் பேசும் விதத்தை வைத்து என்னை கிண்டல் செய்வதா? நிதியமைச்சர் மரியவில்சன் ஆவேசம்
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:05:53 AM (IST)

சதுரகிரி மலையில் காட்டுத்தீ: ஆடி அமாவாசை திருவிழாவிற்குப் பக்தர்கள் செல்லத் தடை - ஆட்சியர் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:50:02 AM (IST)

வாகன சோதனையில் இளைஞரை லத்தியால் தாக்கிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் : எஸ்பி உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:35:18 AM (IST)

ஆதரவாளர்கள் கையில் 'நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்: நடிகர் சரத்குமார் விருப்பம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:45:19 PM (IST)

பொதுமக்களுக்குத் தடங்கலின்றி சீரான குடிநீர் விநியோகம் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:59:50 PM (IST)


