» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுவனை கடத்திச்சென்று பாலியல் தொல்லை: அங்கன்வாடி பெண் ஊழியருக்கு 54 ஆண்டுகள் சிறை!

வெள்ளி 7, நவம்பர் 2025 8:26:03 AM (IST)

சிறுவனை கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அங்கன்வாடி பெண் ஊழியருக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

திருவாரூர் மாவட்டம் தேதியூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி லலிதா(39). இவர், எரவாஞ்சேரி வடுகர்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நடனம் ஆட கற்றுத்தருவதாக கூறி அந்த சிறுவனை லலிதா கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி ஊட்டிக்கு கடத்தி சென்றுள்ளார்.

ஊட்டியில் வைத்து அந்த சிறுவனுக்கு லலிதா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர், எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என்று புகார் கொடுத்தனர். அதன் பேரில் அந்த சிறுவனை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையில் லலிதா ஊட்டியில் இருந்து அந்த சிறுவனை நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு விடுதியில் வைத்து அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் நவம்பர் மாதம் 4-ந் தேதி லலிதாவை கண்டுபிடித்து அவரிடம் இருந்து சிறுவனை மீட்டனர். இதுகுறித்து எரவாஞ்சேரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லலிதாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவாரூர் விரைவு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையில், லலிதா சிறுவனை கடத்திச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சரத்ராஜ் நேற்று தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பில், லலிதாவிற்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.18 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கண்ணன் ஆஜராகினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory