» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மூதாட்டிகள் இருவரை கொன்று நகை கொள்ளை : கொலையாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்!

வெள்ளி 7, நவம்பர் 2025 12:40:16 PM (IST)



சேலம் அருகே  மூதாட்டிகள் இருவரை கொன்று நகைகளை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள தூதனூா், காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரி நீரில் திங்கள்கிழமை அப்பகுதியைச் சோ்ந்த பெரியம்மா (75), பாவாயியின் (70) சடலங்கள் மீட்கப்பட்டன. அவா்கள் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன.

இந்த இரட்டை கொலை சம்பவத்தில் கொலையாளிகளைப் பிடிக்க சேலம் மாவட்ட எஸ்பி (பொ) விமலா உத்தரவின்பேரில் சேலம் காவல் துணை கண்காணிப்பாளா் சோமசுந்தரம் தலைமையில் ஆய்வாளா்கள் செந்தில்குமாா் (மகுடஞ்சாவடி), ரமேஷ் (சங்ககிரி), சண்முகம் (தம்மம்பட்டி) ஆகியோரைக் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கொலையில் தொடா்பு உள்ளதாக சந்தேகிக்கும் கருப்பூா், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த அய்யனாா் என்பவரைத் தேடிவருகின்றனா். மேலும், இளம்பிள்ளை, இடங்கணசாலை, கே.கே.நகா் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்தனர்.

இந்த நிலையில், சங்ககிரி அருகே உள்ள ஒருக்காமலை பகுதியில் குற்றவாளி அய்யனார் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் தலைமை காவலர்கள் அழகு முத்து, கார்த்திகேயன் ஆகியோர் குற்றவாளி பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

அப்போது குற்றவாளி அய்யனார் உதவி ஆய்வாளர் கண்ணன் வலது கையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயற்சி செய்தபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் குற்றவாளி அய்யனாரின் வலது காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.இதையடுத்து அய்யனாரை மீட்ட போலீசார் அவரை உடனடியாக சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர்.

பின்னர், அய்யனார் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதவி ஆய்வாளர் கண்ணனிடம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) விமலா மற்றும் சங்ககிரி உதவி கண்காணிப்பாளர் தனசேகர் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory