» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் மிக கனமழை: கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

ஞாயிறு 23, நவம்பர் 2025 5:43:30 PM (IST)

கனமழை காரணமாக  கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து சுமார் 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்படுகிறது. 

தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 22.11.2025 முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இன்று (23.11.2025) பிற்பகல் 3 மணி நிலவரப்படி,  மருதூர் அணைக்கட்டிலிருந்து  சுமார் 15250 கன அடியும், திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 11060 கனஅடி நீரும் வெளியேறி தாமிரபரணி ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.  அதே போல்,  கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து சுமார் 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது.

எனவே, மருதூர்மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள்,  கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக ஏரல் பாலத்திற்கு அருகிலும், ஆத்தூர் பாலத்திற்கு அருகிலும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

inbaNov 25, 2025 - 08:31:32 AM | Posted IP 162.1*****

flood all over there

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory