» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எஸ்.ஐ.ஆர்.பணிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை : தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!

திங்கள் 24, நவம்பர் 2025 4:08:22 PM (IST)

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் கூடுதல் அவகாசத்திற்கு வாய்ப்பில்லை. பணிகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயகர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் கூடுதல் அவகாசத்திற்கு வாய்ப்பில்லை. எஸ்.ஐ.ஆர் பணிகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும். கூடுதல் அவகாசம் இதுவரை கொடுக்கப்படவில்லை. படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப்படிவங்களில் 50 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன.2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எஸ்.ஐ.ஆர் படிவத்தில் நிச்சயம் பெயர் இருக்கும். கணக்கீட்டுப்படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்தால் உரிய காரணம் தெரிவிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எஸ்.ஐ.ஆர் படிவத்தில் நிச்சயம் பெயர் இருக்கும்.

பெயர் இடம்பெறாவிட்டால் காரணம் தெரிவிக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர் ஆன்லைன் சர்வர் சரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒருவர் தவறான ஆவணத்தை கொடுக்கிறார் எனில் அதை பி.எல்.ஓக்கள்தான் கண்டுபிடிக்க முடியும். டிசம்பர் 4 வரை எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கும் பணி நடைபெறும். 33,000 தன்னார்வலர்கள், 88 ஆயிரம் பி.எல்.ஓ.க்கள் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டுள்ளனர். 327 பி.எல்.ஓக்கள் தங்கள் எஸ்.ஐ.ஆர் பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் படிவங்களை வாங்குவதாக குற்றச்சாட்டு வைப்பது தவறானது. தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் 869 பேர் இங்கு வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory