» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மிகச் சுடர் விருது: பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார்

திங்கள் 24, நவம்பர் 2025 3:25:54 PM (IST)



எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மிகச் சுடர் விருதை கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் பூஜிதகுரு பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார்.

சாமிதோப்பு அன்புவனத்தில் வைகுண்டரும், வாழ்வியலும் என்ற புத்தக வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விருது வழங்கும் நிகழ்வும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மகாகுரு பால பிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். கவிஞர் முத்துலிங்கம் இறைவணக்கம் பாடினார் தமிழ்நாடு கலை இலக்கிய கழகச் செயலர் முனைவர் முகிலை பாஸ்ரீ வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் தமிழன் இளங்கோ, பேராசிரியர் அப்துல் சமது, தமிழ்ச்சோலை அமைப்பின் தலைவர் பேராசிரியர் சுந்தரலிங்கம் ஆகியோர் உரையாற்றினர். பால பிரஜாபதி அடிகளார் வெளியிட்ட வைகுண்டரும், வாழ்வியலும் என்னும் புத்தகத்தை திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் ஓம் முத்தையா பெற்றுக் கொண்டார். அதன்பின் ஆன்மிகச் சுடர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இதில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலருக்கு விருது வழங்கப்பட்டது. விருதை பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய கழகத் தலைவர் ஈஸ்வரன், நாஞ்சில் கலையகம் மயூரி சீதாராமன், முனைவர் செல்வராஜன், ஈஸ்வரன், பேராசிரியர் ஸ்ரீமதி உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை கவிதாயினி விஜி பூரண்சிங் தொகுத்து வழங்கினார். அன்புவனம் நிர்வாகி பேராசிரியர் ஆர் தர்ம ரஜினி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory