» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் 10 பவுன் நகை திருடியவர் கைது!

வெள்ளி 28, நவம்பர் 2025 8:43:34 AM (IST)



கோவில்பட்டி அருகே ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் 10 பவுன் நகைகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் அருள்ஜோதி (54). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கன்னியாகுமரி- ராமேசுவரம் ரயிலில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.

ரயிலில் தூங்கிய அவர், விருதுநகர் வந்தபோது திடீரென கண் விழித்தார். அப்போது அருகில் வைத்திருந்த தனது கைப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பையில் மாெத்தம் 9½ பவுன் எடையில் தங்கச்சங்கிலிகள், செல்போன் மற்றும் ரூ.1,500 ஆகியவை இருந்ததாக சக பயணிகளிடம் கூறினார். பின்னர் அனைவரும் பையை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவர், விருதுநகர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ரயிலில் ஆசிரியை அருள் ஜோதியின் நகைகளை திருடியது தொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த வள்ளி முத்துப்பாண்டியனை (45), அங்குள்ள மந்திதோப்பு பகுதியில் ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த நகைகளை மீட்ட போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory