» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

வெள்ளி 28, நவம்பர் 2025 5:17:27 PM (IST)



சென்னையில் நாய் மற்றும் பூனைகளுக்கு உரிமம் பெறும் கடைசி நாள் அடுத்த மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பெருநகர மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.

இதனிடையே, செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (ஆன்லைன் போர்டல்) சென்னை மேயரால் கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்துவரும் நாய் மற்றும் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனைகளுக்கு உரிமம் பெறும் கடைசி நாள் அடுத்த மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னையில் உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்த்தால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory