» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி அருகே கார் மீது வேன் மோதல்: பெண் உயிரிழப்பு - 11 பேர் படுகாயம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 10:42:29 AM (IST)
தூத்துக்குடி அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த கார் மீது ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். 11பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி ஜெயசித்ரா (42). இவர்கள் தங்களது இரண்டு குழந்தைகளுடன் மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சி கலந்து விட்டு மீண்டும் தூத்துக்குடிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். தூத்துக்குடி அருகே உள்ள குறுக்கு சாலை பெருமாள் கோவில் அருகே கார் வந்தபோது, காரை சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.
இதனிடையே சின்னசேலம் அருகே உள்ள காலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் பக்தர்கள் திருச்செந்தூர் நோக்கி தனியார் வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை காலக்குறிச்சி கேசவன் நகரை சேர்ந்த ஆஷிப் (37) என்ற டிரைவர் ஓட்டி வந்தார். வேன் மிக வேகமாக வந்ததால் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த காரை கவனிக்காமல் பின்னால் பயங்கர சத்தத்துடன் மோதியது.
இந்த விபத்தில் காரின் இருந்த ஜெயசித்ரா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், வேனில் இருந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தந்தையை எரித்துக் கொன்ற மகளுக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 7:32:16 PM (IST)

ஆளுநர் மாளிகை 'மக்கள் மாளிகை தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 1, டிசம்பர் 2025 5:45:29 PM (IST)

கனமழையால் பள்ளிக் குழந்தைகள் பரிதவிப்பு: ஆட்சியாளர்களுக்கு அன்புமணி கண்டனம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 4:46:14 PM (IST)

டித்வா புயல் பாதிப்பு : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு
திங்கள் 1, டிசம்பர் 2025 4:24:34 PM (IST)

பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமம் ஏலம் : டிச.10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 4:03:58 PM (IST)

பேருந்து ஓட்டுநர்களின், பயண நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்!
திங்கள் 1, டிசம்பர் 2025 11:58:49 AM (IST)




