» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமம் ஏலம் : டிச.10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 4:03:58 PM (IST)
பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமம் தொடர்பான ஏலத்திற்கு ஒப்பந்தப்புள்ளியை டிச.10ம் தேதி காலை 9.00 மணிவரை வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நாகர்கோவில் (இ) குளச்சல் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு மீன்பிடி உரிமை தொடர்பான ஏல அறிவிப்புவிடும் பொருட்டு இணைய வழி ஏல அறிவிப்பானது (e-tender) சென்னை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அவர்களால் கடந்த 25.11.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமம் தொடர்பான ஏல அறிவிப்பு, ஏல நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை www.tntendersgov.in என்ற இணையதள முகவரியில் பார்வையிடலாம். மேலும் இந்த இணையவழி ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஒப்பந்தப்புள்ளி படிவம் மற்றும் இதர படிவங்களை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் 19494/F3/2024 என்ற ஏல அறிவிப்பு எண்ணினை உள்ளீடு செய்து கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியை 10.12.2025 அன்று காலை 9.00 மணிவரை சமர்ப்பிக்கலாம்.
மேலும் ஏலம் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் ([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் அல்லது குளச்சல் சைமன்காலனியில் அமைந்துள்ள நாகர்கோவில் (இ) குளச்சல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ நிவர்த்தி செய்து கொள்ளலாம். எனவே, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டத்தில் அமைந்துள்ள பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்கும் உரிமையை 5 ஆண்டுகளுக்கு குத்தகை பெற விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கேட்டுக் கொள்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தந்தையை எரித்துக் கொன்ற மகளுக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 7:32:16 PM (IST)

ஆளுநர் மாளிகை 'மக்கள் மாளிகை தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 1, டிசம்பர் 2025 5:45:29 PM (IST)

கனமழையால் பள்ளிக் குழந்தைகள் பரிதவிப்பு: ஆட்சியாளர்களுக்கு அன்புமணி கண்டனம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 4:46:14 PM (IST)

டித்வா புயல் பாதிப்பு : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு
திங்கள் 1, டிசம்பர் 2025 4:24:34 PM (IST)

பேருந்து ஓட்டுநர்களின், பயண நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்!
திங்கள் 1, டிசம்பர் 2025 11:58:49 AM (IST)

தூத்துக்குடி அருகே கார் மீது வேன் மோதல்: பெண் உயிரிழப்பு - 11 பேர் படுகாயம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 10:42:29 AM (IST)




