» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை

வெள்ளி 5, டிசம்பர் 2025 10:19:36 AM (IST)

​திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் மதுரை ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் மீதான நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு தடை கோரிய மனுவை 2 நீதிப​தி​கள் அமர்வு தள்​ளு​படி செய்த நிலை​யில், நீதி​மன்ற அவம​திப்பு மனு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்​னிலை​யில் நேற்று மாலை விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி, கோயில் செயல் அலு​வலர், காவல் ஆணை​யர், மாவட்ட ஆட்​சி​யர் ஆகியோர் ஆஜராக வேண்​டும் எனவும், நேரில் இல்​லா​விட்​டாலும் காணொலி வாயி​லாக உடனடி​யாக ஆஜராக வேண்​டும் எனவும், காவல் ஆணை​யர் சீருடை​யில் இல்​லா​விட்​டாலும் பரவா​யில்​லை, கண்​டிப்​பாக ஆஜராக வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டார்.

அரசுத் தரப்​பில் "அதி​காரி​கள் 5 நிமிடங்​களில் ஆஜராக வேண்​டும் என்​றால் எப்​படி?" என்று கேள்வி எழுப்​பப்​பட்​டது. அதற்கு நீதிப​தி, "5.30 மணிக்​குள் ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் காணொலி வாயி​லாக ஆஜராகா​விட்​டால் கடும் உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும்" என்​றார். பின்​னர் காவல் ஆணை​யர் ஜெ.லோக​நாதன் காணொலி வாயி​லாக ஆஜரா​னார்.

அவரிடம் நீதிப​தி, நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்​படுத்த நடவடிக்கை எடுத்​தீர்​களா, 144 தடை உத்​தர​வைப் பிறப்​பிக்க ஆட்​சி​யருக்கு எப்​போது பரிந்​துரைக்​கப்​பட்​டது என்​றெல்​லாம் கேள்வி எழுப்​பி​னார். அதற்கு காவல் ஆணை​யர் பதில் அளித்​தார்.

பின்​னர் நீதிபதி தனது உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: தீபத் தூணில் தீபம் ஏற்​று​வதற்​காக மனு​தா​ரர், அவரது வழக்​கறிஞர்​கள் ஆகியோர் சிஐஎஸ்​எப் பாது​காப்​புடன் மலைக்​குச் செல்ல முயன்​ற​போது காவல் ஆணை​யர் தடுத்​துள்​ளார். 144 தடை உத்​தரவு அமலில் இருப்​ப​தால், மேலே செல்ல அனு​ம​திக்க இயலாது என்று கூறி​யுள்​ளார்.

அதாவது, நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்ற இயலாது என்று தெரி​வித்​துளளார். இதனால் தீபம் ஏற்ற இயல​வில்​லை. காவல் ஆணை​யர் போது​மான பாது​காப்பு வழங்​கி​யிருந்​தால், பிரச்​சினை பெரி​தாகி​யிருக்​காது. ஆணை​யர் நீதி​மன்​றத்​தை​விட, ஆட்​சி​யர் பெரிய​வர் என்று எண்​ணி​யுள்​ளார். ஆட்​சி​யர் பிறப்​பித்த உத்​தர​வால், நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்​படுத்த இயல​வில்லை என்று விளக்​கம் அளித்​துள்​ளார். மாவட்ட ஆட்​சி​யர் பிறப்​பித்த 144 தடை உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது.

இன்று (டிச. 4) சர்​வாலய தீபத்திரு​நாள் என்​ப​தால் இன்​றும் கார்த்​திகை தீபம் ஏற்​றலாம். நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்ற காவல் ஆணை​யர் முழு பாது​காப்பு வழங்க வேண்​டும். மனு​தா​ரர் தீபத் தூணில் தீபத்தை ஏற்ற வேண்​டும். இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​பட்​டது தொடர்​பாக நாளை (இன்று) காலை 10.30 மணிக்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இந்த உத்​தரவை மீறி​னால் கடும் விளைவு​கள் ஏற்​படும்​. இவ்​வாறு நீதிப​தி உத்​தர​வில்​ தெரி​வித்​துள்​ளார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory