» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாமதுரையின் தேவையை மக்கள் முடிவு செய்வார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெள்ளி 5, டிசம்பர் 2025 10:42:06 AM (IST)

மாமதுரைக்கு தேவை வள்ளர்ச்சி அரசியலா அல்லது ....... அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால், உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

இதனால் கோர்ட்டு உத்தரவை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில் நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரித்தது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நேற்று முன் தினம் மதுரை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதை விசாரித்த கோர்ட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், மாமதுரைக்கு தேவை வள்ளர்ச்சி அரசியலா அல்லது....... அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள்.

மெட்ரோ இரயில்,

#AIIMS,

புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!

- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory